தமிழ்நாட்டில் பாதுகாப்பு தளவாட உற்பத்தி! ரூ.3,861 கோடி ஒதுக்கீடு.. 5 நகரங்கள் தேர்வு!
மாநிலங்களவையில் பாமக எம்பி அன்புமணி ராமதாஸ் எழுப்பிய கேள்விக்கு மத்திய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் பதில்.
பாதுகாப்பு தளவாட உற்பத்தி:
தமிழ்நாட்டில் பாதுகாப்பு தளவாட உற்பத்திக்காக தொழிற்சாலைகள் ரூ.3,861 கோடி ஒதுக்கீடு செய்துள்ளன என்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் பாமக எம்பி அன்புமணி ராமதாஸ் எழுப்பிய கேள்விக்கு மத்திய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் எழுத்துபூர்வமாக பதிலளித்தார்.
டான்டிக்-கிற்கு ரூ.3,861 கோடி முதலீடு:
மேலும் இணை அமைச்சர் எழுத்துபூர்வமான பதிலில், தமிழ்நாடு பாதுகாப்பு தொழில்துறை வழித்தடமான டான்டிக்-கிற்கு ரூ.3,861 கோடி முதலீடு கிடைத்துள்ளது. டி.என்.டி.ஐ.சி.யில் ரூ.11,794 கோடி முதலீடு செய்ய மொத்தம் 53 நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன.
ரூ.11,794 கோடிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தற்போது ரூ.3,861 கோடி கிடைக்கப் பெற்றுள்ளது. பாதுகாப்பு தளவாட உற்பத்திக்காக சென்னை, சேலம் , ஓசூர், கோவை, திருச்சியில் டான்டிக் முனையங்கள் அமைந்துள்ளன. டான்டிக்கின் 5 முனையங்களில் அமைய உள்ள தொழிற்சாலைகள் மூலம் நேரடி மற்றும் மறைமுக வேலையிவைப்பு உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.