கரூர் 4 வழிச்சாலைக்காக 137 கோடி ரூபாய் ஒதுக்கீடு.! வெளியான அரசாணை.!
வைரமடை முதல் கரூர் செல்லும் 81 கிமீ தேசிய நெடுஞ்சாலையானது 4 வழிசாலையாக மாற்றுவதற்கு 137.25 கோடி ரூபாய் மதீப்பீடு செய்யப்பட்டு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கரூரில் வைரமடை எனும் ஊரில் இருந்து கரூர் வரை செல்லும் இருவழிச்சாலை தேசிய நெடுஞ்சாலையானது போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும் காரணத்தால், இதனை 4 வழிசாலையாக மாற்ற தற்போது தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதாவது கோயம்பத்தூர் – சிதம்பரம் தேசிய நெடுசாலையில், வைரமடையில் இருந்து கரூர் செல்லும் பாதையானது மிகவும் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள நெடுஞ்சாலை பாதையாகும். அப்பகுதியில் கட்டுமான தொழிற்சாலைகள், ஜவுளி தொழிற்சாலைகள், கல் குவாரி போன்றவைகள் அதிகமாக அமைந்துள்ளன.
இதனால், சாதாரண பேருந்து முதல், தொழிற்சாலை கனரக வாகனங்கள் வரை அனைத்தும் செல்லும் சாலையாக இருக்கிறது. இந்த சாலை தான் கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், சென்னை, கோயம்புத்தூர், ஊட்டி ஆகிய முக்கிய மாவட்டங்களை இணைக்கும் சாலையாகவும் அமைந்துள்ளது.
இவ்வளவு போக்குவரத்துக்கு தேவைகள் உள்ள இந்த இருவழிச்சாலை நாளுக்கு நாள் போக்குவரத்து கூட்ட நெரிசல் அதிகம் உள்ள சாலையாக மாறி வருகிறது. போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலை பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த 81 கிமீ இருவழிசாலை தேசிய நெடுஞ்சாலையை 4 வழி சாலையாக மாற்றுவதற்கு 137.25 கோடி ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டு அதற்காக மத்திய அரசிடம் ஒப்புதல் பெறப்பட்டது. இதன் மூலம் மக்கள் பாதுகாப்பான பயணத்தை அந்த வழியிவ் மேற்கொள்ளலாம் என அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.