துருக்கியின் நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் இடிபாடுகளில் சிக்கி மரணம்..!

Default Image

துருக்கியின் கால்பந்தாட்ட நட்சத்திர வீரர் அஹ்மத் ஐயுப் டர்கஸ்லான் (Ahmet Eyup Turkaslan) நிலநடுக்கத்தில் சிக்கி மரணமடைந்தார்.

துருக்கியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் அந்நாட்டின் நட்சத்தர கால்பந்தாட்ட வீரர் அஹ்மத் ஐயுப் துர்கஸ்லான் (Ahmet Eyup Turkaslan) கட்டிட இடிபாடுகளுக்கு அடியில் சிக்கி உயிரிழந்துள்ளார். 28 வயதான அஹ்மத், துருக்கியின் கால்பந்தாட்ட கிளப்பான யெனி மாலத்யஸ்போரின் நட்சத்திர கோல்கீப்பர் ஆவார்.

ahmet eyup turkaslan 1
[Representative Image]

அஹ்மத், பிப்ரவரி 6 அன்று நிலநடுக்கத்தில் காணாமல் போனதாக தேடப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து அஹ்மத்தின் உயிரற்ற உடல் இடிபாடுகளுக்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த உடல் அஹ்மத் ஐயுப் டர்கஸ்லானின் உடல் தான் என்று அவரது கிளப் உறுதிப்படுத்தியுள்ளது. அஹ்மத்தின் மரணம் குறித்து வருந்துவதாகவும் அவரது ஆத்துமா சாந்தியடைய வேண்டுவதாகவும் யெனி மாலத்யஸ்போர் கிளப் ட்வீட் செய்துள்ளது.

2021 ஆம் ஆண்டு துருக்கியின் கால்பந்தாட்ட கிளப்பான யெனி மாலத்யஸ்போரில் (Yeni Malatyaspor) சேர்ந்ததில் இருந்து கிளப்பிற்காக ஆறு முறை விளையாடியது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்