ஆஸ்கர் இல்ல பாஸ்கர் கூட கிடைக்காது…’பதான்’ பட சர்ச்சை பற்றி பேசிய பிரகாஷ்ராஜ்

Default Image

நடிகர் ஷாருக்கான் நடித்த பதான் திரைப்படம் பல சர்ச்சைகளை தாண்டி கடந்த ஜனவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பு பாடல் ஒன்றில் தீபிகா படுகோன் காவி நிற உடை அணிந்திருந்தார். எனவே, இது இந்துக்களுக்கு எதிரானது என்று கூறி படத்தை தடை செய்ய வேண்டும் என்று சிலர் தரப்பில் கோரிக்கை எழுந்தது.

Pathan Box Office
Pathan Box Office [Image Source : Twitter]

பிறகு இறுதியாக அணைத்து தடைகளையும் தாண்டி படம் ஒரு வழியாக வெளியாகி வசூலில் 800 கோடிகளை கடந்து இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது. இதனையடுத்து நடிகர் பிரகாஷ் ராஜ் சமீபத்தில் ” பதான் படத்தின் சர்ச்சை குறித்தும் தி காஷ்மீர் படத்தை பற்றியும் பேசியுள்ளார்.

Pathan Prakash Raj
Pathan Prakash Raj [Image Source : Twitter]

இது குறித்து கேரளாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரகாஷ் ராஜ் ” ஷாருக்கானின் “பதான்” திரைப்படத்தை சிலர் தடை செய்ய நினைத்தார்கள். ஆனால், படம் வெளியாகி உலகம் முழுவதும் 700 கோடிகளை தாண்டி வசூலாகிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தை தடை செய்ய நினைத்தவர்கள் “குரைப்பவர்கள்” தான் “கடிக்கமாட்டார்கள்” என கூறியுள்ளார்.

prakash raj The kashmir files
prakash raj The kashmir files [Image Source : Twitter]

மேலும் பேசிய நடிகர் பிரகாஷ் ராஜ் “காஷ்மீர் ஃபைல்ஸ்” திரைப்படத்தை இயக்கிய அதன் இயக்குநர், எனக்கு ஏன் ஆஸ்கர் கிடைக்கவில்லை என்று புலம்பிக்கொண்டிருக்கிறார். அந்த படத்திற்காக அவருக்கு  ஆஸ்கர் அல்ல… பாஸ்கர் கூட கிடைக்காது” என விமர்சித்து பேசியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்