ஒற்றுமை பயணத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்கள் குறைகளை கூறினார்கள் – ராகுல் காந்தி
குடியரசுத் தலைவர் உரையில் வேலை வாய்ப்பின்மை என்ற வார்த்தையை இடம்பெறவில்லை என மக்களவையில் ராகுல் ராகுல் பேச்சு.
மக்களவையில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அவர்கள் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தனது ஒற்றுமை பயணம் குறித்து பேசினார்.
ராகுல் உரை
ராகுல் காந்தி ஒற்றுமைப்பயணம் குறித்து கூறுகையில், ஒற்றுமைப்பயணத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்களது குறைகளை எடுத்துக் கூறினார்கள். ஒற்றுமை பயணத்தில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என அனைவரிடமும் பேசினேன்.
அக்னிவீர் திட்டத்தால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். ராணுவத்தால் அக்னீவீர் கொண்டுவரப்பட்டதாக நான் நினைக்கவில்லை. விலையேற்றம், விவசாய பாதிப்பு நாட்டின் முக்கிய பிரச்சினையாக உள்ளது. நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக பழங்குடியின மக்கள் கூட்டம் குற்றம்சாட்டுகின்றனர்.
குடியரசுத் தலைவர் உரையில் வேலை வாய்ப்பின்மை என்ற வார்த்தையை இடம்பெறவில்லை. நாடு முழுவதும் அதானிவிவகாரம் குறித்தே பேசப்படுகிறது. அனைத்து வணிகத்திலும் அதானி வெற்றி காண்பது குறித்து மக்கள் வியப்பு தெரிவிக்கின்றனர். அனைத்து துறைகளிலும் அதானி நுழைந்து விடுவதாகவும் மக்கள் கருதுகின்றனர்