பொன்னியின் செல்வன் 2-ன் முதல் சிங்கிள் எப்போது தெரியுமா?
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பல பிரபலங்களின் நடிப்பில் இரண்டு பாகங்களாக உருவாகி இருந்த திரைப்படம் பொன்னியின் செல்வன். இதில் முதல் பாகம் கடந்த செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி தமிழ்,தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது.
படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்திருந்தது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் 500 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது. இந்நிலையில், பொன்னியின் செல்வன் 2 ஏப்ரல் 28 ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வரும் என்று தயாரிப்பாளர்கள் சமீபத்தில் அறிவித்தனர்.
தற்போது, இப்படம் குறித்த சமீபத்திய தகவல் என்னவென்றால், இந்த படத்தின் ப்ரோமோஷன் இந்த மாதம் தொடங்கப்படவுள்ளதாக தெரிகிறது. அட ஆமாங்க… பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தின் முதல் சிங்கிள் காதலர் தினமான பிப்ரவரி 14 அன்று வெளியாகும் என்று தகவல்கள் கசிந்துள்ளது.
ஒரு தகவலின்படி, சோழ இளவரசர் அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி நடித்தார் மற்றும் அவரது காதலியான வானதியாக ஷோபிதா துளிபாலா நடித்திருந்தார். இவர்களுக்கு இடையேயான காதல் பாடலாகத்தான் முதல் சிங்கிள் இருக்கும் என கண்டிக்கப்பட்டுள்ளது. மேலு, இந்த பாடலை ஏஆர் ரஹ்மான் பாடியுள்ளாராம்.
இரண்டாம் பாகத்தில் நடிகர்களான சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய் பச்சன், த்ரிஷா, ஷோபிதா துலிபாலா, ஜெயராம், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், அஷ்வின் மற்றும் பலர் நடித்துள்ளனர்.