உலகிலேயே மிகப்பெரிய பல்கலைக்கழகம் கூகுள்தான் – டிஜிபி சைலேந்திர பாபு
லிங்க் அனுப்பி அதனை க்ளிக் செய்ய சொன்னால், ஆபத்து என்று அர்த்தம் என டிஜிபி சைலேந்திரபாபு பேச்சு.
சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்.
உலகிலேயே மிகப்பெரிய பல்கலைக்கழகம் கூகுள்தான்
இன்று எல்லாமே கம்யூட்டர் தான். உலகிலேயே மிகப்பெரிய பல்கலைக்கழகம் கூகுள்தான்; உலகமே டிஜிட்டலாக மாறி வருகிறது. மோசடிகளில் சிக்கிக் கொள்ளாமல் கவனமாக .இருக்க வேண்டும்.
முன்பு திருடர்கள் இரவு நேரத்தில் வீட்டிற்கு வந்து பொருட்களை திருடி செல்வார்கள். தற்போது இணையதளம் வழியாக பல்வேறு சைபர் க்ரைம் நடைபெறுகிறது; யாராவது லிங்க் அனுப்பி அதனை க்ளிக் செய்ய சொன்னால், ஆபத்து என்று அர்த்தம் என தெரிவித்துள்ளார்.