அதிமுக வேட்பாளர் தென்னரசு வேட்புமனு தாக்கல்!

Default Image

ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் கேஎஸ் தென்னரசு தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

ஈரோடு இடைத்தேர்தல்:

ERODEBYE

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்-27ல் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பணியில் பிரதான அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைதேர்தலில், போட்டியிடுவதற்கு வேட்பு மனுக்கள் கடந்த ஜன-31 முதல் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன.

அதிமுகவில் வேட்பாளர் சர்ச்சை:

CANDIDATEISSUE

வேட்பு மனுக்கள் தாக்கல் செய்வதற்கு இன்று கடைசி நாளாகும், நேற்றுவரை மொத்தம் 59 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதனிடையே, அதிமுகவில் வேட்பாளர் சர்ச்சை நிலவி வந்த நிலையில், நேற்று முடிவுக்கு வந்தது. அதன்படி, இடைத்தேர்தல் வேட்பாளர் தென்னரசு தான் என பொதுக்குழு உறுப்பினர்கள் மூலம் தேர்வு செய்து தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இபிஎஸ் தரப்பிற்கு இரட்டை இலை சின்னம்: 

TWOLEAF

இதனை ஏற்ற தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்தது. மறுபக்கம் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் முன்கூட்டியே வாபஸ் பெறப்பட்டார். எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டதை அடுத்து, எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிமுக வேட்பாளர், தென்னரசு இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் என கூறப்பட்டது.

அதிமுக வேட்புமனு தாக்கல்:

EPSTHENNARASU1

அந்தவகையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் தென்னரசு தேர்தல் பிரச்சாரத்தை  காலை தொடங்கினார். அதிமுகவில் வேட்பாளர் குழப்பம் முடிவுக்கு வந்த நிலையில், தென்னரசு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்த சமயத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே  கடைசி நாள் என்பதால், இபிஎஸ் தரப்பு வேட்பாளர் தென்னரசு வேட்புமனு தாக்கல் செய்தார். இடைத்தேர்தலில் காங்கிரஸ், நாம் தமிழர், அமமுக, தேமுதிக வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், அதிமுகவும் தாக்கல் செய்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்