கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு – 3 பேரிடம் விசாரணை!

Default Image

கோடநாடு கொலை, கொள்ள வழக்கு தொடர்பாக 3 பேரிடம் சிபிசிஐடி விசாரணை.

கோடநாடு கொலை, கொள்ள வழக்கு தொடர்பாக 3 பேரிடம் சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது. அதன்படி, கோடநாடு வழக்கு தொடர்பாக கர்சன் செல்வம், மணிகண்டன் மற்றும் ஜெயசீலன் ஆகியோரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் 3 பேரிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எஸ்டேட் மேலாளர் நடராஜனின் நண்பரும், அப்போதைய அதிமுக மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளருமான கர்சன் செல்வம் உள்ளிட்ட 3 பேருக்கும் சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். 3 பேரும் சிபிசிஐடி விசாரணை அலுவலகத்தில் இன்று ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்