பாஜக எம்எல்ஏ உறவினர் கார் விபத்து..! 2 பேர் பலி, 4 பேர் படுகாயம்..!

Default Image

பெங்களூரு நிருபதுங்கா சாலையில் கார் கட்டுப்பாட்டை இழந்து மக்கள் மீது மோதியதால் இரண்டு பேர் உயிரிழந்தனர் மற்றும் நான்கு பேர் காயமடைந்தனர்

பெங்களூரில் உள்ள நிருபதுங்கா சாலையில் பாஜக எம்எல்ஏ உறவினரின் கார் விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் உயிரிழந்தனர், மேலும் 4 பேர் காயமடைந்தனர். நிருபதுங்கா சாலையில் நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் பாஜக எம்எல்ஏ எச் ஹலப்பாவின் உறவினரான ஓய்வு பெற்ற வன அலுவலர் ராமு சுரேஷிடம் பணிபுரியும் எம்.மோகன் என்பவர் காரை ஓட்டி வந்துள்ளார். அந்த காரில் எம்எல்ஏ ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது குறிபிடத்தக்கது.

BJP MLA Hartalu Halappa

திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சென்ற மற்ற வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர் மற்றும் நான்கு பேர் காயமடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கார் ஓட்டுனரை கைது செய்தனர். விசாரணையில் கார் ஓட்டுனர் மோகன் தவறுதலாக பிரேக்குக்கு பதிலாக ஆக்சிலேட்டரை அழுத்தியதால் விபத்து ஏற்பட்டது என்று கூறியுள்ளார்.

SUV hits vehicle 1

விபத்தில் இறந்தவர்கள் ஆட்டோமொபைல் உறுதி பாகங்கள் விற்பனை செய்யும் மஜீத் கான் மற்றும் வாகன நிறுத்துமிட மேலாளர் ஐயப்பா என்றும் காயமடைந்தவர்கள் ரியாஸ் பாஷா, முகமது கே ரியாஸ், முகமது சலீம் மற்றும் ஷேர் கிலானி என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து ஓட்டுனர் மோகன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்