துருக்கியில் 2-வது நாளாக மீண்டும் நிலநடுக்கம்..!
துருக்கியில், இன்று காலை மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
துருக்கியில் நேற்று மட்டும் 3-முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. அதே போல் சிரியாவில், இரண்டுமுறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால், பல கட்டடங்கள் தரைமட்டமாகியதோடு, ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
அதன்படி, துருக்கியில் தற்போது வரை 2921 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 15,834 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சிரியாவில் இதுவரை 1451 பேர் உயிரிழந்துள்ளனர். 3531 பேர் காயமடைந்துள்ளனர். மொத்தம் இரு நாடுகளிலும் சேர்த்து இதுவரை 4372 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என கணிக்கப்படுகிறது.
இந்த நிலையில், துருக்கியில், இன்று காலை மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கம் 5.6 ரிக்டராக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. துருக்கியில் 4-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், அங்குள்ள மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.