ஓபிஎஸ் – ஈபிஎஸ் சந்திப்பு நடைபெறுமா..? – கு.ப. கிருஷ்ணன் பதில்
உச்ச நீதிமன்றம் வழங்கி உள்ள தீர்ப்பு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான தீர்ப்பு மட்டும்தான் என கு.ப.கிருஷ்ணன் பேட்டி.
ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் விமானம் மூலம் மதுரைக்கு செல்வதற்கு முன்பதாக அவரது பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் வைத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது ஓபிஎஸ்-யிடம் செய்தியாளர்கள் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஆதரித்து பரப்புரை மேற்கொள்வீர்களா என கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர் ஈரோடு கிழக்கு இடை தேர்தலில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பதற்கு செல்வதற்கு முன்பதாக நான் முறையாக அறிவிப்பை வெளியிடுவேன் என தெரிவித்துள்ளார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் அவர்கள் ஆளும் திமுகவை எதிர்த்து ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாங்கள் நிற்கிறோம் .அவரவர் பாணியில் நாங்கள் இரட்டை இலைக்காக பிரச்சாரம் மேற்கொள்வோம்.
உச்ச நீதிமன்றம் வழங்கி உள்ள தீர்ப்பு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான தீர்ப்பு மட்டும்தான். ஓ.பன்னீர்செல்வத்தை பாராட்டிய செங்கோட்டையன் மாப்பிள்ளைக்கு எனது நன்றி என தெரிவித்தார்.
மேலும் எடப்பாடி பழனிசாமியை ஓபிஎஸ் சந்திப்பாரா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர் எதுவும் நடக்கலாம் என பதில் அளித்துள்ளார்.