சத்தீஸ்கர் சீட் ஃபண்ட் மோசடி..! 30 கோடி ரூபாய் மீட்பு..!
சத்தீஸ்கரில் சிட் ஃபண்ட் மோசடியில் பாதிக்கப்பட்ட 37,000 பேருக்கு ரூ.30 கோடி ரூபாய் மீட்கப்பட்டு திருப்பி கொடுக்கப்பட்டது.
சத்தீஸ்கரில் 2015-ஆம் ஆண்டு முதல் 2017-ஆம் ஆண்டு வரை 1 லட்சத்திற்கும் மேலான முதலீட்டாளர்களின் பல நூறு கோடி ரூபாய் சிட் ஃபண்ட் மூலம் மோசடி செய்யப்பட்டுள்ளது. காவல்துறையின் உதவியுடன் சத்தீஸ்கர் முழுவதும் உள்ள மாவட்ட நிர்வாகங்கள் 37,000 முதலீட்டாளர் சிட் ஃபண்ட் மூலம் ஏமாற்றிய 30 கோடி ரூபாயை மீட்டு திருப்பி கொடுக்கப்பட்டுள்ளது.
இதுவரை 208 சிட் ஃபண்ட் நிறுவனங்கள் மீது 460 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 655 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு மெய்நிகர் திட்டத்தில், முதல்வர் பூபேஷ் பாகேல், துர்க் மாவட்டத்தைச் சேர்ந்த 3,274 பேருக்கு இதுபோன்ற சிட் ஃபண்டுகளில் முதலீடு செய்து ஏமாற்றப்பட்ட ரூ.2.56 கோடியைத் திருப்பிக் கொடுத்துள்ளார். நிறுவனங்களின் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளில், 84 வழக்கில் ரூ.76.3 கோடி மதிப்பிலான 44 சிட் ஃபண்டுகளின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
54 வழக்குகளில் 32 நிறுவனங்களின் ரூ.52 கோடி மதிப்புள்ள சொத்துகளை ஏலமிடப்படும், ஒப்பந்த நடவடிக்கைகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள வழக்குகளில் ரூ.24.27 கோடி மதிப்பிலான 14 நிறுவனங்களின் சொத்துக்கள் ஏலம் விடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.