அதானி குழுமம் தொடர்பான விவாதத்தை தடுக்க பிரதமர் மோடி தன்னால் முடிந்ததை செய்வார்.! ராகுல்காந்தி விமர்சனம்.!
அதானி குழும விவகாரம் தொடர்பான விவாதத்தை தடுக்க பிரதமர் நரேந்திர மோடி தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வார். – காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி விமர்சனம்.
2023-24க்கான மத்திய பட்ஜெட் தாக்கல் கூட்டம் முடிந்த பிறகு நடைபெற்ற நேற்று வரையிலான 3 நாள் நாடாளுமன்ற இரு அவைகளும் எதிர்கட்சியினர் அமளியால் ஒத்திவைக்கப்பட்டன. காரணம், பட்ஜெட் கூட்டம் முடிந்த பிறகு விவாத நேரம் வரும்போது, எதிர்க்கட்சியினர் அதானி குழும விவகாரம் குறித்து விவாதம் நடத்த கோரினர். அனால், அதற்கு சபாநாயகர் ஓம் பிர்லா அனுமதி அளிக்க மறுத்துவிட்டார். அதனால் தான் எதிர்க்கட்சியினர் தொடர் அமளியில் ஈடுப்பட்டனர்.
நாடாளுமன்றத்தில் அதானி குழும விவகாரம் : பல்வேறு பங்குச்சந்தை முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஓர் பிரபல அமெரிக்க பத்திரிகை நிறுவனம் விமர்சித்து, தொடர்ந்து பங்கு சந்தையில் சரிவை சந்தித்து வரும் அதானி குழும பங்குகளில் எல்ஐசி முதலீடு செய்திருப்பதாகவும், அதே போல தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் அதானி குழுமத்திற்கு கடன் வழங்கப்பட்டிருப்பதாகவும் குற்றம் சாட்டி, அது குறித்து விவாதம் நடத்த எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுப்பட்டனர்.
ராகுல்காந்தி விமர்சனம் : இந்நிலையில், இந்த நாடாளுமன்ற அமளி குறித்து பேசிய காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி, அதானி குழும விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் அனைவரும் விவாதிக்க வேண்டும். உண்மை மக்கள் அனைவர்க்கும் தெரிய வேண்டும். அதானிக்கு பின்னால் இருக்கும் சக்தியை நாட்டு மக்களுக்கு அம்பலப்படுத்தியாக வேண்டும். இந்த அதானி குழும விவகாரம் தொடர்பான விவாதத்தை தடுக்க பிரதமர் நரேந்திர மோடி தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வார். என ராகுல்காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.