மெஸ்ஸியின் டி-ஷர்ட்டை பரிசாகப் பெற்ற பிரதமர் மோடி, ஜெய்சங்கர்.!
பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் மெஸ்ஸியின் டி-ஷர்ட்டை பரிசாகப் பெற்றனர்.
வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் அர்ஜென்டினாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் டேனியல் பிலிமஸை நேற்று சந்தித்தார். இந்த சந்திப்பில் அணுசக்தி, விண்வெளி, டிஜிட்டல், பாதுகாப்பு மற்றும் உயிரி தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கு இடையேயான இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து இரு நாட்டு அமைச்சர்களும் விவாதித்தனர்.
வர்த்தகத்தை விரிவுபடுத்துதல், முதலீடு மற்றும் பல துறைகள் மேம்படுத்துதல் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த சந்திப்பின் முடிவில் ஜெய்சங்கர், அர்ஜென்டினா அமைச்சரிடமிருந்து கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியின் டி-ஷர்ட்டை பரிசாகப் பெற்றுக்கொண்டார், இதற்கிடையில் பிப்ரவரி 6 முதல் 8 வரை நடைபெற உள்ள இந்திய எரிசக்தி வாரத்தை தொடங்கிவைத்த மோடி, அதில் கலந்து கொண்ட அர்ஜென்டினா அரசின் எரிசக்தி நிறுவனமான YPF தலைவர் பாப்லோ கோன்சாலஸிடம் இருந்து மெஸ்ஸி டி-ஷர்ட்டைப் பெற்றார்.
ஜெய்ஷர்கர் தனது ட்விட்டரில், அர்ஜென்டினாவின் அமைச்சர் பிலிமஸ் டேனியலை சந்தித்ததில் மகிழ்ச்சி. அணு ஆற்றல், விண்வெளி, டிஜிட்டல், பாதுகாப்பு மற்றும் உயிரித் தொழில்நுட்பம் ஆகியவற்றில் நமது ஒத்துழைப்பைப் பற்றி விவாதித்தோம் என்று பதிவிட்டிருந்தார், மேலும் இந்த சந்திப்பின் படங்களையும், மெஸ்ஸியின் டி-ஷர்ட்டை வைத்திருக்கும் படத்தையும் ட்விட்டரில் பகிர்ந்தார்.
Glad to meet Minister of S&T and Innovation of Argentina @FilmusDaniel.
Discussed our cooperation in atomic energy,space,digital,defense &biotechnology.
Underlined the potential for expanding trade,investment &collaboration and serving as an example of south-south cooperation. pic.twitter.com/zvnCrVUsPi
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) February 6, 2023