துருக்கிக்கு இரண்டு மீட்புக் குழுக்களை அனுப்ப அமெரிக்கா முடிவு-நெட் பிரைஸ்.!
துருக்கியில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, அந்நாட்டிற்கு அமெரிக்கா இரண்டு மீட்பு குழுக்களை அனுப்ப முடிவு செய்துள்ளது.
துருக்கி மற்றும் சிரியாவில் நேற்று அடுத்தடுத்து ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கி இதுவரை உயிரிழந்துள்ளனர். இன்னும் மீட்பு பணியினர் தொடர்ந்து தேடி வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்கா, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி மற்றும் சிரியாவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் தெரிவித்தார்.
இது குறித்து பிரைஸ் கூறும்போது எங்கள் துருக்கிய நட்பு நாடுகளுடன் எப்போதும் தொடர்பில் இருந்து வருகிறோம், எங்கள் ஆரம்ப உதவிகள் ஏற்கனவே நடந்து வருகிறது. இந்த நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அனைத்து உதவிகளையும் வழங்குவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம், என்று நெட் பிரைஸ் கூறினார்.
78 நபர்களைக் கொண்ட இரண்டு மீட்பு மற்றும் தேடுதல் குழுக்கள் துருக்கிக்கு அனுப்பப்படும். துருக்கி மற்றும் சிரியாவிற்கு தேவையான கூடுதல் நிதி ஆதாரங்களை நிச்சயமாக வழங்குவோம். எங்கள் துருக்கி மற்றும் சிரியா மக்களுக்கும் எங்களால் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்ய நாங்கள் உறுதியாக உள்ளோம் என்று அவர் மேலும் கூறினார்.