63 பயணிகள் “நோ ஃப்ளை லிஸ்ட்” பட்டியலில் சேர்ப்பு – விமான போக்குவரத்து
63 பயணிகள் “நோ ஃப்ளை லிஸ்ட்” இல் வைக்கப்பட்டுள்ளனர் என்று விமான போக்குவரத்து அமைச்சகம் தகவல்.
கடந்த ஓராண்டில் விமான நிறுவனத்தின் உள் குழு பரிந்துரைத்தபடி, மொத்தம் 63 பயணிகள் “நோ ஃப்ளை லிஸ்ட்”-இல் வைக்கப்பட்டுள்ளனர் என்று (சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகத்தின் (DGCA) அறிவித்துள்ளது. இதுதொடர்பாக விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஒரு வருடத்தில் 2 சிறுநீர் கழித்தல் சம்பவங்கள் அடங்கும்.
சம்பந்தப்பட்ட பயணி தொடர்பான குறிப்பிட்ட தகவல்கள், தொடர்பு விவரங்கள், அடையாள ஆவணங்கள், நிகழ்ந்த தேதி, பிரிவு, விமான எண், தடை விதிக்கப்பட்ட காலம் போன்றவற்றைக் கொண்ட ‘நோ ஃப்ளை லிஸ்ட்’ DGCA-ஆல் பராமரிக்கப்படுகிறது என கூறப்பட்டுள்ளது. “நோ ஃப்ளை லிஸ்ட்” என்ற பட்டியலில் இடம் பெற்றுள்ள பெரும்பாலான பயணிகள் முகக்கவசம் அணியாதது, பணியாளர்களின் அறிவுறுத்தல்களுக்குக் கீழ்ப்படியாதது தொடர்பான விதிமீறல்களுக்காக இருந்தனர்.
சிறுநீர் கழித்தல் சம்பவங்கள் – விதிமுறைகளுக்கு இணங்காததற்காக பின்வரும் நடவடிக்கை.
1) AI-102 விமானம், 26.11.2022 தேதியன்று நியூயார்க்கிலிருந்து புது டெல்லி. ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.30,00,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஏர் இந்தியாவின் விமான சேவை இயக்குனருக்கு ரூ.3,00,000 அபராதம் விதித்து, விமானியின் உரிமம் 3 மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டது.
2) AI-142, 06.12.2022 தேதியன்றுபாரீஸ் முதல் புது தில்லி விமானம். ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.10,00,000 நிதி அபராதமாக DGCA விதித்துள்ளது. இந்த தகவலை சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் இணை அமைச்சர் வி.கே.சிங் ராஜ்யசபாவில் இன்று தெரிவித்தார் என கூறியுள்ளனர்.