#DelhiMayorElection: டெல்லி மேயர் தேர்தல் 3வது முறையாக ரத்து!
டெல்லியில் ஆம் ஆத்மி மற்றும் பாஜக இடையே ஏற்பட்ட மோதலால் டெல்லி மேயர் தேர்தல் 3வது முறையாக ரத்து செய்யப்பட்டது.
டெல்லி மாநகராட்சியில் பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர்களிடையே மோதல் ஏற்பட்டதால் மாநகராட்சி மேயர், துணை மேயர் மற்றும் நிலைக்குழு தேர்தல் மூன்றாவது முறையாக இன்றும் ரத்து செய்யப்பட்டது. எல்-ஜி விகே சக்சேனாவால் பரிந்துரைக்கப்பட்ட பத்து கவுன்சிலர்கள் தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர், இது ஆம் ஆத்மிக்கு பின்னடைவாக உள்ளது.
ஆல்டர்மென்களுக்கு வாக்களிக்கும் உரிமையை எதிர்த்து ஆம் ஆத்மி உறுப்பினர்கள் போராட்டம் நடத்தியதால் மூன்றாவது முறையாக நடைபெற்ற சபை தடைபட்டன. ஆம் ஆத்மி கட்சியின் உள்ள 135 கவுன்சிலர்களும் கையெழுத்திட்ட கடிதத்தில், நியமனம் செய்யப்பட்ட தனிநபர்கள் அரசியலமைப்பு மற்றும் டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் சட்டத்தின்படி வாக்களிக்க தகுதியற்றவர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
டெல்லி மேயர் தேர்தலில் சூழ்ச்சி செய்ய பாஜக முயற்சித்ததாகவும் அவர்கள் கூறினர். இதன் காரணமாக ஆம் ஆத்மி மற்றும் பாஜக இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் மூன்றாவது முறையாக தேர்தல் ரத்து செய்யப்பட்டது. டெல்லி மேயர் பதவிக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட பிறகு, ஆம் ஆத்மி உறுப்பினர்கள் அவையை விட்டு வெளியேற மறுத்ததாகவும், பாஜக உறுப்பினர்கள் வெளியேறியதாகவும் கூறப்படுகிறது.