ஐஸ்கிரீமில் இறந்த நிலையில் தவளை – 3 குழந்தைகள் .மருத்துவமனையில் அனுமதி…!
இறந்த நிலையில் தவளை கிடந்த ஐஸ்கிரீமை சாப்பிட்ட 3 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி.
மதுரை கோவலன் நகர் மணிமேகலை தெருவை சேர்ந்தவர் அன்புசெல்வம்- ஜானகிஸ்ரீ தம்பதிகள். தைப்பூச விழாவை முன்னிட்டு நேற்று இவர் தனது 3 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு, திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு சென்றுள்ளார்.
அப்போது கோவில் அருகே இருந்த ஒரு கடையில், ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்துள்ளார். இதனை சாப்பிட்ட குழந்தைகளுக்கு திடீரென வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சந்தேகமடைந்த ஜானகிஸ்ரீ குழந்தைகள் சாப்பிட்ட ஐஸ்கிரீமை வாங்கி பார்த்தார்.
அப்போது அந்த ஐஸ்கிரீமில் இறந்த நிலையில் தவளை கிடந்தததை பார்த்துள்ளார். இந்த நிலையில், ஜானகிஸ்ரீ உடனடியாக இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தைகள் 3 பேரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.