சென்செக்ஸ் 400 புள்ளிகளுக்கு மேல் சரிவு..!

Default Image

பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 431 புள்ளிகள் குறைந்து 60,410 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 17,729 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

தற்பொழுது மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 431 புள்ளிகள் அல்லது 0.71% என குறைந்து 60,410 ஆகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 124.45 புள்ளிகள் அல்லது 0.70% குறைந்து 17,729 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

அதானி போர்ட்ஸ் (Adani Ports and Special Economic Zone Limited) நிஃப்டி 50 லாபத்தில் முதலிடத்தில் உள்ளது. தற்பொழுது பங்குகள் 3.6 சதவீதம் உயர்ந்து 516.8 ஆக உள்ளது. அதானி போர்ட்ஸ் பங்குகள் கடந்த பத்து வர்த்தக அமர்வுகளில் இரண்டு அமர்வுகளில் மட்டுமே லாபம் ஈட்டியுள்ளன.

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் பங்குகள் சென்செக்ஸ் 0.3% அதிகரித்து ரூ.94.1 ஆக உள்ளது. பாரத் எலெக்ட்ரானிக்ஸ் பங்குகள் கடந்த இரண்டு வர்த்தக அமர்வுகளில் ஏற்றம் அடைந்துள்ளது. சென்செக்ஸ் 400 புள்ளிகள் சரிந்ததையடுத்து, பஜாஜ் ஃபைனான்ஸ், ஐடிசி, எஸ்பிஐ போன்ற நிறுவனங்கள் லாபம் அடைந்துள்ளன.

முந்தைய வர்த்தக நாள் முடிவில் பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 60,841 ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 17,854 ஆகவும் நிறைவடைந்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்