ஓபிஎஸ், இபிஎஸ் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு!
கேசி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.
அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்து கேசி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஓபிஎஸ், இபிஎஸ் பதில் தர உத்தரவிட்டு, கேசி பழனிசாமி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை 2 வாரத்துக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம்.
மேலும், நீக்க எதிர்த்து குறித்த காலத்தில் வழக்கு தொடரவில்லை என கூறி தனது மனுவை தள்ளுபடி செய்தது தவறு என்றும் கொரோனா காலத்தில் வழக்கு தாக்கல் செய்ய வரம்பை தளர்த்தியதை கருத்தில் கொள்ளாமல் மனு தள்ளுபடி செய்யப்பட்டது எனவும் கேசி பழனிசாமி கூறியுள்ளார்.