இளையராஜா இசையில் பாடிய தனுஷ்…வைரலாகும் ‘விடுதலை’ படத்தின் புதிய ப்ரோமோ.!
வெற்றிமாறன் இயக்கியுள்ள ‘விடுதலை’ படத்தின் முதல் பாடலை நடிகர் தனுஷ் பாடியுள்ளார். அதற்கான ப்ரோமோ வீடியோ தற்போது இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.
விடுதலை
நடிகர்கள் சூரி, விஜய்சேதுபதி ஆகியோர் நடிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகி வரும் திரைப்படம் விடுதலை. இந்த படத்தில் கெளதம் மேனன், பிரகாஷ் ராஜ், ஸ்ரீ, உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்து வருகிறார்.
விடுதலை முதல் பாடல்
விடுதலை படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைக்கிறார் என்பதாலே படத்தின் பாடல்கள் மீது பெரிய எதிர்பார்ப்புகள் இருந்தது. எனவே ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்த விடுதலை படத்தின் முதல் பாடலான ஒன்னோட நாடந்தா என்ற முதல் படம் வரும் பிப்ரவரி 8-ஆம் தேதி வெளியாகும் என ப்ரோமோவுடன் அறிவிக்கப்பட்டுள்ளது.
இளையராஜா இசையில் பாடிய தனுஷ்
இளையராஜாவின் தீவிர ரசிகரான நடிகர் தனுஷ் தான் விடுதலை படத்தின் முதல் பாடலை பாடியுள்ளார். இன்று வெளியான ப்ரோமோவில் ” இளையராஜா இசை வாசித்து காமிக்கிறார். பிறகு தனுஷ் தனது தேன் குரலால் பாடலை பாடுகிறார். அந்த ப்ரோமோ தற்போது இணையத்தில் மிகவும் வைராகி வருகிறது.
The first single #Onnodanadandhaa from #Viduthalai part 1 releasing on Feb8th
???? @ilaiyaraaja ⁰
????@dhanushkraja & #AnanyaBhat
✒️ #Suga
Promo from the recording session#Vetrimaaran @VijaySethuOffl @sooriofficial @rsinfotainment @SonyMusicSouth @RedGiantMovies_ pic.twitter.com/SjrJnXvC6K— Ilaiyaraaja (@ilaiyaraaja) February 6, 2023