முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் அமைப்பது அவசியம் – திருமாவளவன்

Default Image

முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நினைவுச்சின்னம் அமைப்பது அவசியமானது என திருமாவளவன் பேட்டி. 

முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு ஆதரவும், எதிர்ப்பும் எழுந்த வண்ணம் உள்ளது. இந்த இதுகுறித்து, சென்னை விமான நிலையத்தில் திருச்சி புறப்படுவதற்கு முன் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் பேட்டி அளித்துள்ளார்.

அப்போது பேசிய அவர், முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நினைவுச்சின்னம் அமைப்பது அவசியமானது.  இந்த சின்னம் பொதுமக்கள் அனைவரும் வரவேற்கும் கூடிய வகையில்  இருக்க வேண்டும். அதேபோல் முதல்வர் மு.க.ஸ்டாலின் இதை கவனத்தில் கொண்டு முடிவு எடுப்பார் என தெரிவித்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் கட்சியில் களப்பணி செய்பவர்களுக்கே நிதி வழங்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு ஆடியோவில் பேசி இருப்பார். இடைத் தேர்தல் நியாயமாக நடக்கும். ஈரோடு கிழக்கு தொகுதியில் எதிர்க்கட்சிகள் போட்டியிட்டாலும் திமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பு உறுதியாக இருக்கிறது  என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்