அதானி குழும விவகாரம்.! எதிர்க்கட்சியினர் தொடர் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு.!
அதானி குழும விவகாரம் குறித்து எதிர்க்கட்சியினர் தொடர் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது.
கடந்த வாரம் பட்ஜெட் கூட்டம் தொடங்கும் முன்னர் குடியரசு தலைவர் உரை தொடங்கி, அதன் பிறகு பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட் கூட்டம் நடைபெற்றது. அதற்கு பிறகு 3ஆம் நாளே எதிர்க்கட்சியினர் தொடர் அமளியில் ஈடுப்பட்டனர். இதனால், மக்களவை மாநிலங்களாவை என இரு அவர்களும் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, இன்று நாடாளுமன்ற மக்களவை தொடங்கியதும், அதானி குழும விவகாரம் குறித்து எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். அதானி குழுமத்தில் எல்ஐசி முதலீடு செய்த விவகாரம், அதானி குழுமத்திற்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் அளித்த கடன் விவரங்கள் குறித்து விவாதம் நடத்த அனுமதி கோரினர்.
ஆனால், அதற்கு சபாநாயகர் ஓம் பிர்லா அனுமதி அளிக்கவில்லை என தெரிகிறது. இதனை அடுத்து தான காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இந்த அமளியை தொடர்ந்து முதலில் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. அதற்கு பிறகு நாடளுமன்ற இரு அவைகளும் மதியம் 2 மணிவரையில் ஒத்திவைக்கப்பட்டது.