சட்டவிரோத மின் இணைப்பு..! மதுரா மசூதிக்கு அபராதம்..!
சட்டவிரோதமாக மின்சார இணைப்பு வைத்திருந்ததால் மதுரா மசூதிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
உத்திர பிரதேசத்தின் மதுராவில் உள்ள ஷாஹி இத்கா மசூதியின் மின் இணைப்பை உ.பி அரசாங்கம் துண்டித்தது. உ.பி-யில் சட்டவிரோத மின்சார நுகர்வுக்கு எதிரான தொடர் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகவும், ஸ்ரீ கிருஷ்ணா ஜென்மபூமி முக்தி நிர்மான் அறக்கட்டளை அழித்த புகாரின் அடிப்படையிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மதுரா மாவட்ட காவல்துறை மற்றும் மின்சாரத் துறையின் கூட்டுக் குழுவால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மதுராவில் உள்ள ஷாஹி இத்கா மசூதியில் சட்டவிரோதமாக மின் இணைப்பு வைத்திருந்ததாக கிருஷ்ணா நகர் காவல் நிலையத்தில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதனையடுத்து ஷாஹி இத்கா மஸ்ஜித் கமிட்டியின் செயலாளர் தன்வீர் அகமதுவிடம் இருந்தும் அபராதம் வசூலிக்கப்பட்டது. ஸ்ரீ கிருஷ்ணா ஜென்மபூமி முக்தி நிர்மான் அறக்கட்டளை, ஷாஹி இத்கா மசூதியின் சொத்துக்கள் மீது வழக்கு தொடர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.