11 ஆண்டு காதல்…காதலனை கரம் பிடித்தார் பிரபல நடிகை.! குவியும் வாழ்த்துக்கள்.!

Default Image

பிரபல பாலிவுட் நடிகை சித்ராஷி ராவத் தனது 11 ஆண்டுகால காதலனான துருவாதித்யா பகவானியை கரம் பிடித்தார்.

நடிகை சித்ராஷி ராவத் ஷாருக் கான் நடிப்பில் 2007ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘சக் தே இந்தியா’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர். இந்த படத்தை தொடர்ந்து பிளார் ஹோம், பிரேம் மாயீ , லக், தேரே நள் லவ் ஹோ கயா, போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Chitrashi Rawat (@chitrashi)

இந்த நிலையில், கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் நடிகை சித்ராஷி ராவத் துருவாதித்யா பகவானி என்பவரை காதலித்து வருகிறார்.  இதனை தொடர்ந்து அவரை திருமணம் செய்துகொள்ளப்போவதாக கடந்த வாரம் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.

 

View this post on Instagram

 

A post shared by Chitrashi Rawat (@chitrashi)

இதனையடுத்து, இவர்கள் இருவருக்கும் கடந்த பிப்ரவரி -5ஆம் சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் நடிகை சித்ராஷி ராவத் துருவாதித்யா இருவருக்கும் திருமணம் கோலாகளமாக நடந்து முடிந்தது. இவர்களுடைய திருமணத்திற்கு நெருங்கிய நண்பர்கள் மற்றும் சில சினிமா பிரபலங்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

திருமணம் முடிந்ததை தொடர்ந்து புதுமண ஜோடிகள் சித்ராஷி ராவத் துருவாதித்யா இருவரும் சிறிய அளவிலான தேரில் சாலையில் வலம் வந்தனர். திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த தம்பதிகளுக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்