கைரனா சட்டப்பேரவைத் தொகுதியில் கடும் பின்னடைவை சந்தித்த பாஜக!
இன்று நான்கு மக்களவை,10 சட்டப்பேரவை தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
உத்தரப்பிரதேசத்தின் கைரானா, மகாராஷ்டிராவில் பால்கர், பண்டாரா, கோண்டியா மற்றும் நாகாலாந்து மக்களவைத் தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ள நேரத்தில் மக்களவையில் மோடி அரசின் செல்வாக்கை இந்த இடைத்தேர்தல் முடிவுகள் தீர்மானிக்கும் என்று கருதப்படுகிறது. இதே போன்று கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் பத்து சட்டமன்றத் தொகுதிகளின் இடைத் தேர்தல் முடிவுகளும் இன்று வெளியாகின்றன.
கைரனா தொகுதியை பறிகொடுக்கிறது பாஜக
உத்தரபிரதேசத்தில் மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் கைரனா சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கைரானா தொகுதி பாஜக எம்.பி. ஹுக்கும் சிங் காலமானார். அந்தத் தொகுதியில் ஹுக்கும் சிங்கின் மகள் மிரிகங்கா சிங் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து ராஷ்டிரிய லோக்தள் சார்பில் தபசம் ஹசன் களமிறங்கி உள்ளார். இவருக்குக் காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் ஆகிய எதிர்க்கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. எனவே, பாஜக.வுக்கு எதிரான வாக்குகள் மூலம் எளிதாக வெற்றிபெற முடியும் என்று எதிர்க்கட்சியினர் காத்திருக்கின்றனர். தற்போதைய நிலவரப்படி அங்கு ராஷ்ட்ரீய லோக்தள் கட்சி முன்னணி பெற்றுள்ளது. ஏற்கெனவே வெற்றி பெற்ற இந்த தொகுதியில் பாஜக தோல்வி முகத்தில் உள்ளது.
இந்த தேர்தலின் முடிவுகளும் இன்னும் சற்று நேரத்தில் வெளியாகின்றன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.