எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை!
எதிர்க்கட்சியின் செயல்பாடு தொடர்பாக மல்லி கார்ஜுன கார்கே தலைமையில் ஆலோசனை.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் செயல்பாடு தொடர்பாக மல்லி கார்ஜுன கார்கே தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனையில் காங்கிரஸ், திமுக, பி.ஆர்.எஸ்., தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி தலைவர்கள் பங்கேற்றயுள்ளனர்.
இந்திய கம்யூனிஸ்ட், மார்கேஸ்ட், ஜேஎம்எம், ஆர்எல்டி, ஆர்எஸ்பி, ஆம் ஆத்மி, சிவசேனா கட்சியினர் பங்கேற்றுள்ளனர். நாடாளுமன்றத்தில் அதானி விவகாரம் மற்றும் பிற பிரச்சனைகள் தொடர்பாக குரல் எழுப்புவது குறித்து விவாதம் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
இதனிடையே, அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் விவாதிக்க கோரி திமுக திமுக எம்பிக்கள் குழு தலைவர் திருச்சி சிவா நோட்டீஸ் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், அதானி குழும விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு (ஜேபிசி) அல்லது உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் விசாரணை நடத்தக் கோரி, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு திரண்டு முழக்கங்களை எழுப்பினர்.