அதானி விவகாரம் – விவாதம் கோரி திமுக நோட்டீஸ்!
அதானி விவகாரம் தொடர்பாக டெல்லி நாடாளுமன்ற மாநிலங்களவையில் திமுக எம்பிக்கள் குழு தலைவர் திருச்சி சிவா நோட்டீஸ்.
இதனிடையே, அமெரிக்காவை சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான “ஹிண்டன்பர்க் நிறுவனம்” வெளியிட்ட அறிக்கையில், இந்திய பணக்காரரும், பிரபல தொழிலதிபருமான அதானிக்கு சொந்தமான நிறுவனங்கள் பங்கு சந்தையை தவறாக கையாள்கிறது, கணக்குகளில் முறைகேடு இருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தற்போது பேசும் பொருளாகவும் மாறியுள்ளது. ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையை தொடர்ந்து அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு தொடர்ந்து சரிவில் உள்ளது. இதனால் பல லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதன் விளைவு காரணமாக உலகின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் இருந்தும் வெளியேற்றப்பட்டார் அதானி.
அதானி குழுமம் நிறுவங்களின் பங்குகள் 8வது நாளாக சரிவை சந்தித்துள்ளன. அதானி குழுமம் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் அறிக்கை வெளியிட்டதை அடுத்து பங்குகள் விலை வீழ்ச்சியில் இருந்து வருகிறது. இந்த நிலையில், அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க கோரி திமுக இன்று நோட்டீஸ் கொடுத்துள்ளது. டெல்லி நாடாளுமன்ற மாநிலங்களவையில் திமுக எம்பிக்கள் குழு தலைவர் திருச்சி சிவா நோட்டீஸ் அளித்துள்ளார்.