ஜனவரி மாத UPI பரிவர்த்தனை மதிப்பு ₹12.98 லட்சம் கோடி; வெளியான தகவல்.!
ஜனவரி மாதத்தில் UPI பரிவர்த்தனை மதிப்பு ரூ.12.98 லட்சம் கோடியைத் தொட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (என்பிசிஐ) வெளியிட்டுள்ள தகவல்களின்படி, யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI) மூலம் ஜனவரி மாதம் செய்யப்பட்ட பணப்பரிவர்தனை ரூ.12.98 லட்சம் கோடியை எட்டியதாகக் கூறியது. கடந்த ஆண்டு டிசம்பரில் ரூ.12.82 லட்சம் கோடி மதிப்பிலான பரிவர்த்தனைகள் பதிவாகியுள்ளன.
ஜனவரியில் மொத்தம் 385 வங்கிகள் இந்த UPI-யில் இருந்தன, மேலும் கடந்த மாதம் 382 வங்கிகள் மட்டுமே UPI பரிவர்த்தனையில் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் மொத்தம் 803.68 கோடி முறை UPI பரிவர்த்தனைகள் செய்யப்பட்டன, இது 2022 டிசம்பரில் 782.94 கோடியாக இருந்தது.
2022 ஜனவரியில் 461 கோடியாக இருந்த UPI பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு ஜனவரியில் 74% அதிகரித்துள்ளது, அதே சமயம் பரிவர்த்தனைகளின் மதிப்பு கடந்த ஆண்டு ஜனவரியில் ரூ.8.31 லட்சம் கோடியிலிருந்து 52% அதிகரித்து ரூ.12.98 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.