மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு; குளறுபடியால் புதிய உத்தரவு.!
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதில் ஏற்பட்ட குளறுபடியால் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மின் இணைப்புடன், ஆதார் எண்களை இணைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அதில் நிறைய குளறுபடிகள் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதனையடுத்து மின்வாரியம் புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது. வீட்டின் உரிமையாளர், குத்தகைதாரர் மற்றும் இணை உரிமையாளர்களுக்கு தெரியமாலே ஆதார் எண்கள் இணைக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
ஆதார் எண் இணைப்பு முழுவீச்சில் நடைபெறுவதாக காட்டுவதற்கு அதிக அளவில் சம்பந்தமில்லாத ஆதார் எண்களை இணைத்துள்ளது வெளியாகியுள்ளது. சம்பந்தப்பட்ட நபர்களின் ஆதார் எண் மட்டுமே மின் இணைப்புடன் இணைக்கப்பட வேண்டும், இதனை நீங்கள் தான் உறுதிசெய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது போன்ற செயல்களால் அரசின் திட்டத்தின் நோக்கமே வீணாகியுள்ளது என மின் வாரியம் கண்டனம் தெரிவித்துள்ளது. உயரதிகாரிகள் இதற்கு தனிக்கவனம் செலுத்தி, உரிய தகவல்களை தெரிவிக்க மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.