இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் விலகல்
நாக்பூரில் பிப்ரவரி 9 ஆம் தேதி தொடங்கும் பார்டர்-கவாஸ்கர் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் வேகப்பந்து வீச்சாள ஜோஷ் ஹேசில்வுட் இடது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவரால் விளையாட முடியாது என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
ஹேசில்வுட், கடந்த மாதம் தனக்கு ஏற்பட்ட ஒரு இடது குதிகால் நிக்கிள் இன்னும் சிக்கலை ஏற்படுத்துவதாகவும், தொடரின் முதல் ஆட்டத்தையாவது தவறவிடுவேன் என்றும் கூறியுள்ளார்.இவருக்கு பதிலாக இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் விளையாட ஸ்காட் போலண்ட் வாய்ப்பு பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் டெஸ்ட் போட்டி முடிந்து மூன்று நாட்களுக்குப் பிறகு நடக்கவிருக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டி ஹேசில்வுட் பங்கேற்பார் என தெரிகிறது.ஆனால் ஏற்கனவே மிட்செல் ஸ்டார்க் மற்றும் கேமரூன் கிரீன் விரல் காயங்களிலிருந்து இன்னும் மீளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.