Apps Ban: சீனாவை சேர்ந்த 138 சூதாட்ட மற்றும் 94 லோன் ஆப்களுக்கு தடை
உள்துறை அமைச்சகத்தின் தகவல்களின் பேரில், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) சீனாவுடன் தொடர்புடையதாக கூறப்படும் 138 சூதாட்ட செயலிகள் மற்றும் 94 லோன் கடன் வழங்கும் செயலிகளை தடைசெய்துள்ளது மத்திய அரசு.
சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு 288 சீன செயலிகளை இந்திய அரசு பகுப்பாய்வு செய்யத் தொடங்கியது என்றும்,,இந்திய குடிமக்களின் தனிப்பட்ட தரவுகளை அணுகியிருக்கலாம் என தெரியவந்துள்ளது.இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு பாதகமாக இருப்பதால் தடை செய்யப்பட்டுள்ளது.
அந்த நிறுவனங்கள் மற்றும் நபர்களால் இயக்கப்படும் மொபைல் செயலிகள் மூலம் சிறிய அளவிலான கடன்களைப் பெற்ற தனிநபர்களை மிரட்டி பணம் பறித்தல் மற்றும் துன்புறுத்துதல் போன்ற பல புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.