இவரது ஆட்சியில் பழங்குடியினர் சதவீதம் குறைந்து வருகிறது..! – அமித் ஷா
ஜார்கண்டில் முதல்வர் சோரன் ஆட்சியில் ஆதிவாசிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாக அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார்.
முதல்வர் ஹேமந்த் சோரன் ஆட்சியின் போது ஜார்க்கண்டில் மக்கள்தொகை மாற்றத்தால் பழங்குடியினர் மக்கள்தொகை சதவீதம் குறைந்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டினார்.
ஜார்கண்டில் நடைபெற்ற பாஜக பேரணியில் உரையாற்றிய கட்சியின் மூத்த தலைவர் அமித் ஷா, சர்வதேச எல்லையில் இருந்து ஊடுருவகாரர்கள் பெருமளவில் மாநிலத்தில் ஊடுருவியதால் பழங்குடியின மக்கள் தொகை 35 சதவீதத்தில் இருந்து 24 சதவீதமாக மாறிவிட்டது என்று கூறினார். மேலும் ஊடுருவல்காரர்கள், பழங்குடியினப் பெண்களைத் திருமணம் செய்து கொண்டு நிலத்தை அபகரிப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
இதுகுறித்து மேலும் பேசிய அவர், “ஹேமந்த் சோரன் அரசாங்கம் நாட்டிலேயே மிகவும் ஊழல் நிறைந்தது. ரயில் பெட்டிகள் மற்றும் டிராக்டர்களைப் பயன்படுத்தி வளங்கள் சூறையாடப்படுகின்றன. மாநிலத்தில் ஆட்சியில் இருந்து இந்த அரசை மக்கள் அகற்றுவார்கள்,” என்றார். அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் மாநிலத்தில் உள்ள 14 மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறும் என்றும் அவர் கூறினார்