AK62 படத்தின் கதை எந்த இயக்குனருடையது தெரியுமா..? வெளியான ரகசிய தகவல்.!
அஜித்தின் 62 வது திரைப்படத்தை குறித்த சுவாரசியமான தகவல் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
ஏகே 62
நடிகர் அஜித்தின் 62 வது திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து சில காரணங்களால் படத்தில் இருந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியேற்றியதாகவும் தகவல்கள் வெளியானது.
பயோவை நீக்கிய விக்கி
ஏற்கனவே விக்னேஷ் சிவன் ஏகே 62 திரைப்படத்திலிருந்து விலகியதாக தகவல்கள் பரவி வந்த நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்த ஏகே 62 வை நீக்கி படத்தில் இருந்து தான் விலகியதை உறுதிப்படுத்தி இருந்தார்.
ஏகே 62-வில் இரண்டு இயக்குனர்கள்..?
இந்த நிலையில், புதிதாக ஒரு தகவல் தற்போது வைரலாகி வருகிறது. அது என்னவென்றால், ஏகே 62- திரைப்படத்தின் கதை பிரபல இயக்குனரான பி.எஸ்.மித்ரனுடையது என்றும், அந்த படத்தின் கதையை தான் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது உண்மை என்றால், விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது