2023-24க்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன் பிரதமர் மோடி கூறியது இதுதான்.! நிர்மலா சீதாராமன் பேட்டி.!

பட்ஜெட்டில் வரிகள் உயர்த்தப்பட கூடாது என பிரதமர் மோடி திட்டவட்டமாக கூறினார் என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.  

கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023 – 2024க்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து இருந்தார். அதில் வருமான வரி உச்சவரம்பு உயர்வு, நர்சிங் கல்லூரிகள், இணையவழி நூலகம் , என பல்வேறு திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி குறித்து அறிவித்தார். இந்த பட்ஜெட் குறித்து பல அரசியல் கட்சி தலைவர்களும் தங்கள் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

அண்மையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு செய்தி நிறுவனத்திற்கு பட்ஜெட் குறித்தும், அதற்கு முன்னெடுத்த ஆலோசனைகள் குறித்தும் பேசினார். அப்போது அவர் கூறுகையில், பிரதமர் நரேந்திர மோடி பட்ஜெட் குறித்து கொடுத்த அறிவுறுத்தல் குறித்து பேசினார்.

அப்போது இந்த பட்ஜெட்டால் இந்திய பொருளாதாரத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அவரிடம் கலந்தாலோசித்தேன். அதற்கு அவர் கூறுகையில், சாமானிய மக்கள் பாதிக்கப்படும் வகையில் வரிகள் உயர்த்தப்பட கூடாது என திட்டவட்டமாக கூறினார் என்று குறிப்பிட்டார். மேலும்,  பிரதமர் மோடி, ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கலில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் எனவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment