இலவச வேஷ்டி சேலை வழங்கும் நிகழ்ச்சி.. கூட்ட நெரிசலில் சிக்கி 3 பெண்கள் உயிரிழப்பு.!
வாணியம்பாடியில் இலவச வேஷ்டி சேலை வழங்கும் நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 3 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் இன்று தனியார் அமைப்பு ஒன்று, நாளை தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு இலவச வேஷ்டி சேலை வழங்கும் விழா ஒன்றினை நடத்தினர். அப்போது அங்கு அதிகளவில் பொதுமக்கள் கூடினர்.
இந்த கூட்டநெரிசலில் பெண்கள் சிக்கி இதுவரை 3 பெண்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 10க்கும் மேற்பட்ட பெண்கள் கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்துள்ளனர். காயமடைந்த பெண்களை அப்பகுதியினர் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இந்த உயிரிழப்பு பற்றி அறிந்த உடன் வாணியம்பாடி வட்டாச்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உடனடியாக வந்து சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.