வந்தே பாரத் ரயிலில் தரமற்ற உணவு..! வெளியாகிய வீடியோ..!
வந்தே பாரத் ரயிலில் தரமற்ற உணவு வழங்கும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
வந்தே பாரத் ரயிலில் பயணிகளுக்கு வழங்கப்படும் காலை உணவு தரமற்று இருப்பதாக பயணி ஒருவர் தனது மொபைல் போனில் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். விசாகப்பட்டினத்திலிருந்து ஹைதராபாத் நோக்கிச் சென்ற வந்தே பாரத் ரயிலில் உணவு தரமற்றதாக பயணிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. பயணி ஒருவர் தனக்கு வழங்கப்பட்ட உணவில் இருந்த வடையை பிழிந்து அதிலிருந்த எண்ணெயை எடுத்துள்ளார்.
இதனால் மற்ற பயணிகள் அனைவரும் உணவை சாப்பிட பயந்தனர். இந்த சம்பவத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பயணி ஒருவர் பதிவிட்டுள்ளார். அதில் “வந்தேபாரத் ரயிலில் பயணிகளுக்கு வழங்கப்படும் உணவில் தரம் இல்லை, விசாகிலிருந்து ஹைதராபாத் வரும் ரயிலில் வடையில் இருந்து எண்ணெய் பிழிந்ததால் காலை உணவை சாப்பிட பயணிகள் பயப்படுகிறார்கள். உணவின் தரம் மோசமாக உள்ளது என்றும் கூறுகிறார்கள்.” என்று எழுதியிருந்தார்.
#VANDHEBHARAT train lo quality leni breakfast, వడ నుండి పిండిన కొద్ది వచ్చిన నూనె
వైజాగ్ నుండి హైదరాబాద్ వస్తున్న ట్రెయిన్ లో ఘటన,
Breakfast తినడానికి భయపడుతున్న ప్రయాణికులు. ఫుడ్ క్వాలిటీ bad గా ఉందని అంటున్నారు pic.twitter.com/Z1WWcw6FTU— RameshVaitla (@RameshVaitla) February 3, 2023
அவரது பதிவிற்கு இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (ஐஆர்சிடிசி), இந்த சம்பவத்தில் சரியான நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்று பதிலளித்துள்ளது. இது ரயில்சேவை தொடங்கப்பட்ட ஒரு மாதத்திற்குள் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Sir, concerned official has been informed for corrective measures.
— IRCTC (@IRCTCofficial) February 3, 2023