நெசவாளர் மின் கட்டணம் குறைப்பு – அமைச்சர் செந்தில் பாலாஜி
விசைத்தறி, கைத்தறி நெசவாளர்களுக்கு மின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்.
ஈரோட்டில் நடைபெற்ற வேட்பாளர் மேடை நிகழ்ச்சியில் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, விசைத்தறி, கைத்தறி நெசவாளர்களுக்கு மின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது என்றும் நெசவாளர்கள் கோரிக்கையை ஏற்று மின் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
மின் கட்டண உயர்வால் ஏற்பட்டுள்ள விசைத்தறி நெசவாளர்கள் பிரச்னைகள் குறித்து ஏற்கெனவே மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இப்பிரச்னையை முதல்வரிடம் கொண்டு சென்று தீர்வு காணப்படும் என தெரிவித்திருந்த நிலையில், நெசவாளர்களுக்கு மின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.