சினிமாவுக்கு வந்து 11 வருஷம்….’மாவீரன்’ படக்குழுவுடன் கேக் வெட்டி கொண்டாடிய சிவகார்த்திகேயன்.!
தொகுப்பாளராக அறிமுகமாய் சினிமாவில் தற்போது கலக்கி வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். மெரினா திரைப்படத்தில் ஹீரோவாக நடித்ததன் மூலம் ஹீரோவாக அறிமுகமான இவர், தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக உயர்ந்திருக்கிறார்.
சிவகார்த்திகேயன் வளர்ச்சி பலருக்கும் முன்னுதாரணமாக இருக்கிறது என்றே கூறலாம். இவர் நடிப்பில் சமீப காலமாக வெளியாகும் படங்கள் கண்டிப்பாக 100 கோடி வசூலை கடந்து விடும். அந்த அளவிற்கு மார்க்கெட்டின் உச்சத்தில் இவர் இருக்கிறார். இந்நிலையில், சிவகார்த்திகேயன் சினிமாவுக்கு வந்து 11-ஆண்டுகள் ஆகிறது.
எனவே ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் அவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இதனையடுத்து, சிவகார்த்திகேயன் தான் சினிமாவிற்குள் நுழைந்து 11-ஆண்டுகள் ஆனதை மாவீரன் படக்குழுவுடன் கொண்டாடியுள்ளார்.
From the sets of #Maaveeran @Siva_Kartikeyan ????????#11YearsOfPrinceSKism #Mahaveerudu@madonneashwin @AditiShankarofl @ShanthiTalkies @DirectorMysskin @iYogiBabu @iamarunviswa @vidhu_ayyanna @philoedit @bharathsankar12 @LokeshJey @sivadigitalart @DoneChannel1 @UrsVamsiShekar pic.twitter.com/6lncBTHnOI
— Shanthi Talkies (@ShanthiTalkies) February 4, 2023
படக்குழுவுடன் அவர் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மாவீரன் படத்தை மடோன் அஸ்வின் இயக்குகிறார். படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை அதிதி ஷங்கர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.