தலைமை செயலகத்தில் 11 புதிய மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை.! 

Default Image

புதியதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட ஆட்சியாளர்கள் பொறுப்புடன் தங்கள் கடமையை ஆற்ற வேண்டும். – தலைமை செயலகத்தில் புதிய மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை. 

அண்மையில் ஜனவரி 31ஆம் தேதி தமிழகத்தில் 11 மாவட்ட ஆட்சியர்களை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதனால் அந்த 11 மாவட்டங்களுக்கும் புதிய ஆட்சியர்கள் நியமிக்கப்பட்ட்டனர். தென்காசி, விருதுநகர், கிருஷ்ணகிரி , பெரம்பலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர் நியமிக்கப்பட்டனர்.

இதில், தென்காசி மாவட்ட ஆட்சியராக ரவிச்சந்திரன், விருதுநகர் மாவட்ட ஆட்சியராக ஜெயசீலன், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக தீபக் ஜேக்கப், விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக பழனி, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராக ஸ்ரீதர், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக கற்பகம், தேனி மாவட்ட ஆட்சியராக சஜ்ஜீவனா, கோவை மாவட்ட ஆட்சியராக  கிராந்தி குமார் பட்டி, திருவாரூர் மாவட்ட ஆட்சியராக சாருஸ்ரீ, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியராக மகாபாரதி ஆகியோர் புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டனர்.

இந்த புதியதாக பதவியேற்ற மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுப்பட்டார். அந்த ஆலோசனை கூட்டத்தில் புதிய மாவட்ட ஆட்சியாளர்களுக்கு முதல்வர் பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.

அதில், புதியதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட ஆட்சியாளர்கள் பொறுப்புடன் தங்கள் கடமையை ஆற்ற வேண்டும். என்னென்ன பணிகள் நடைபெறாமல் இருகிறது, என்னென்ன பணிகள் எந்த நிலையில் இருக்கிறது என்பதை அறிந்து செயல்பட வேண்டும். சட்டம் மற்றும் ஒழுங்கு பணிகளை காப்பாற்ற வேண்டும். மாவட்டத்தில் நிலுவையில் உள்ள பணிகளை விரைவாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியல் உள்ளீடுகளை உங்கள் பணிகளுக்குள் கொண்டு வரக்கூடாது. மாவட்டத்திற்கான அறிவிப்புகளை பார்த்து அதனை உடனடியாக செயல்படுத்த வேண்டும் எனவும்,

சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டும். உங்களிடம் பணிகள் ஒப்படைக்கப்பட்டு விட்டன என நாங்கள் அதனை கண்டுகொள்ளாமல் இருக்க போவதில்லை. தலைமை செயலர் அவ்வப்போது சோதனை செய்வார். அதே போல, நானும் ஆய்வு செய்வேன். எனவும் புதிய மாவட்ட ஆட்சியாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை வழங்கினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்