உயர்நீதிமன்ற நீதிபதி பதவிக்கு இவரை கொலீஜியம் பரிந்துரை செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது – அகில இந்திய வழக்கறிஞர் சங்கம்
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பரிந்துரைக்கப்பட்ட வழக்கறிஞர் விக்டோரியா கெளரியை திரும்ப பெற கோருவது ஏன் என அகில இந்திய வழக்கறிஞர் சங்கம் விளக்கம்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பரிந்துரைக்கப்பட்ட வழக்கறிஞர் விக்டோரியா கெளரி அவர்களை அகில இந்திய வழக்கறிஞர் சங்கம் திரும்ப பெறுமாறு தெரிவித்துள்ளது. இதுகுறித்து விளக்கமும் அளித்துள்ளது.
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ கடந்த (17,01-202) அன்று சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நீதிபதிகளாக நியமனம் செய்ய ஆறு வழக்கறிஞர்கள் மற்றும் மூன்று மாவட்ட நீதிபதிகளை. உச்ச நீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருக்கிறது.
ஆறு வழக்கறிஞர்களில் பாஜக பிரமுகராக அறியப்படும் வழக்கறிஞர் விக்டோரியா கௌரி உயர்நீதிமன்ற நீதிபதியாக பரிந்துரைக்கப்பட்டதற்கு கண்டன குரல்கள் எழுந்து வருகின்றன. மேற்படி பரிந்துரை வந்த நாள் முதல் வழக்கறிஞர்கள் மத்தியிலிருந்தும் ஜனநாயக் அமைப்புகளிலிருந்தும் விக்டோரிய கௌரியின் பரிந்துரையை கொலிஜீயம் திரும்பப்பெற வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்து வருகிறது.
இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பரிந்துரைக்கப்பட்ட வழக்கறிஞர் விக்டோரியா கெளரி, அரசியல் சார்பு உள்ளவர் என்பதால் மட்டுமே அவரை திரும்பப் பெற கேட்கவில்லை, சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்பு பேச்சின் காரணமாகவே அவரை எதிர்ப்பதாக அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் கூறியுள்ளது.
நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைபாட்டிற்கும் குந்தகம் ஏற்படுத்த கூடிய வகையில் பேசிய ஒருவரை உயர்நீதிமன்ற நீதிபதி பதவிக்கு கொலீஜியம் பரிந்துரை செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
மத்தியில் ஆளக்கூடிய ஒரு கட்சியின் அமைப்பில் செயல்பட்டு வரும் ஒருவரை நீதிபதியாக பரிந்துரைப்பது நீதிபதிகள் நியமனத்தில் கொலீஜியத்தின் நம்பகத்தன்மையின் மீது மக்களுக்கு ஐயம் ஏற்பட வாய்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.