சிவகங்கை அருகே கோயில் திருவிழா மோதலில் உயிரிழப்பு 3 ஆக உயர்வு!

Default Image

நேற்று முன் தினம்  இரு சமூகத்தினரிடையே சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே ஏற்பட்ட மோதலில் இருவர் உயிரிழந்தனர். மேலும், 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள திருப்பாச்சேத்த்தியை அருகிலுள்ள ஆவரங்காடு – கச்சநத்தம் கிராமங்களைச் சேர்ந்த இரு சமூகத்தினரிடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கச்சநத்தம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களை வழி மறித்து, ஆவரங்காடு கிராம இளைஞர்கள் சிலர் தாக்கியதாக கூறப்படுகிறது.

அத்துடன், இரவு நேரத்தில், கச்சநத்தம் கிராமத்தினுள் புகுந்த மற்றொரு சமூக இளைஞர்கள், கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், ஆறுமுகம் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மருதுபாண்டி என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சுரேஷ், சந்திரசேகர், சுகுமாறன், தனசேகரன் உள்ளிட்ட மேலும் 5 பேர் பலத்த காயங்களுடன் திருப்புவனம் மற்றும் மதுரை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில் தற்போது இரு தரப்பினர் இடையேயான மோதலில் உயிரிழப்புகள் 3 ஆக உயர்ந்துள்ளது. மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவரில் சந்திரசேகர் உயிரிழந்தார். படுகாயம் அடைந்த அவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்