கோயம்பேடு சந்தை வளாகத்தில் 8 ஏக்கரில் பூங்கா.! அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு.!
கோயம்பேடு காய்கறி சந்தை வளாகத்தில் புதியதாக 8 ஏக்கர் பரப்பவு கொண்ட ஓர் பூங்கா அமைக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. – அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார்.
இந்தியாவில் மிக பெரிய காய்கறி சந்தைகளில் ஒன்றாக செயல்படுவது சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை. கிட்டத்தட்ட தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்கள் வரையில் இதன் வியாபர சந்தை மிக பெரியது. இந்த கோயம்பேடு சந்தையை மேம்படுத்தும் பணியில் தற்போது தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது.
இதற்கான பணிகளை சிஎம்டிஏ அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த பணிகளை தமிழக அமைச்சர் சேகர்பாபு மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது அவர் கோயம்பேடு மார்க்கெட்டில் மேம்படுத்தப்பட உள்ள பணிகள் பற்றி கூறினார்.
அவர் கூறுகையில், கோயம்பேடு காய்கறி சந்தை வளாகத்தில் புதியதாக 8 ஏக்கர் பரப்பவு கொண்ட ஓர் பூங்கா அமைக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. வெளிநாடுகளில் செயல்பட்டு வரும் காய்கறி சந்தைகள் போல தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.