ஓய்வுபெற்ற காவல் அதிகாரிகள், காவலர்கள் இறந்தால் இதை செய்ய வேண்டும் – டிஜிபி அதிரடி உத்தரவு
ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் யாரேனும் இறந்துவிட்டால் அவர்கள் இறுதி சடங்கில் சீருடையுடன் சென்று காவல்துறை அதிகாரி மரியாட்டாகி செலுத்த வேண்டும் என உத்தரவு.
தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்று அனுப்பியுள்ளார்.
அதில் அனைத்து மாநகர மாவட்ட காவல் நிலைய எல்லைக்குட்ப்பட்ட உட்பட்ட பகுதியில் வசிக்கும் ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் யாரேனும் இறந்துவிட்டால் அவர்களுக்கு அவர்கள் ஆற்றிய சேவையை அங்கீகரிக்கும் வண்ணமாக காவல் நிலைய பொறுப்பு அதிகாரி சீருடையுடன் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டு காவல்துறை தலைமை இயக்குனர் சார்பாக மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும் இதனை தவறாத கடைபிடிக்கும் வண்ணம், அனைத்து காவல் நிலையங்களிலும் அந்தந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் ஒய்வு பெற்ற காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் பதிவேடு ஒன்று பராமரிக்க வேண்டும் என்றும், இந்த பதிவேடு காவல் நிலைய எல்லையில் வாழும் ஓய்வு பெற்ற காவலர்கள் பதிவேடு என்று பெயரிடப்பட வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.