அதிமுக அலுவலகத்தில் தமிழ்மகன் உசேன், சிவி சண்முகம் ஆலோசனை!
அதிமுக வேட்பாளர் ஒப்புதல் படிவத்தை அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் விநியோகம் செய்ய உள்ளதாக தகவல்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தமிழ்மகன் உசேன், சிவி சண்முகம் ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் ஒப்புதல் படிவத்தை அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் விநியோகம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
பன்னீர்செல்வம், அவரது தரப்பின் பொதுக்குழு உறுப்பினருக்கும் வேட்பாளர் ஒப்புதல் கடிதம் தர அதிமுக திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியபடி ஓபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆதரவு பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் வேட்பாளர் ஒப்புதல் படிவம் சற்று நேரத்தில் அனுப்பபடும் – அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தகவல் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஈரோடு இடை தேர்தலில் ஓபிஎஸ், இபிஎஸ் தனித்தனியே வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். இதனால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படுமா? என கேள்வி எழுந்தது. இந்த நிலையில், ஈரோடு கிளைக்கு தொகுதி இடை தேர்தலில் அதிமுகவின் வேட்பாளரை தேர்ந்தெடுப்பது இனி அதிமுகவின் பொது குழு முடிவு செய்யப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.
மேலும், அதிமுக பொதுச் குழு முடிவிற்கு கையெழுத்து பெற ஒபிஎஸ் தரப்புக்கு எடப்பாடி பழனிசாமி அனுப்பலாம். அதில் கையெழுத்து போடுவது அவர் முடிவெடுக்கலாம். அதை அவை தலைவர் தமிழ் மகன் உசைன் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பலாம் எனவும் உச்சநீதிமன்றம் கூறியிருந்தது.