மீண்டும் தாமதமாகும் காவிரி மேலாண்மை வாரியம்! மத்திய நீர்வளத்துறை தகவல்
கடந்த 18-ஆம் தேதி அன்று தென்மேற்கு பருவமழைக் காலம் தொடங்கும் முன்னரே காவிரி வரைவு செயல் திட்டத்தை அரசிதழில் வெளியிட்டு, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டுமென மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை செயல்படுத்த, மத்திய அமைச்சரவையை கூட்டி அதன் ஒப்புதலை பெற்று, அரசிதழில் வெளியிட வேண்டும். அதன்பிறகு தான் காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்க முடியும். பிரதமர் மோடி, வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருப்பதால் இந்த வாரம் அமைச்சரவை கூட்டம் நடைபெறவில்லை.
வாரியம் அமைப்பது மேலும் தாமதமாகும் என்பதை மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் ஒப்புக் கொண்டுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரி வரைவு செயல்திட்டத்துக்கு அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்படவில்லை என்றும், பிரதமர் ஊரில் இல்லாததால் வேறுவழிகளை ஆராய்கிறோம்’ என்றார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.