மூன்று மாநில தேர்தல் – தேர்தல் விவரம் இதோ..!
நாகாலாந்து மற்றும் மேகாலயா மாநிலங்களில் பிப்ரவரி-27 ஆம் தேதியும், திரிபுரா மாநிலத்தில் பிப்ரவரி-16 ஆம் தேதியும் சட்டமன்ற வாக்குப்பதிவு நடைபெறும்
நாகாலாந்து, மேகாலயா மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் தேதியை, இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மூன்று மாநிலங்களிலும் 60 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது.
நாகாலாந்து மற்றும் மேகாலயா மாநிலங்களில் பிப்ரவரி-27 ஆம் தேதியும், திரிபுரா மாநிலத்தில் பிப்ரவரி-16 ஆம் தேதியும் சட்டமன்ற வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 3 மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை மார்ச்-2இல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
திரிபுரா மாநிலத்தில் ஜனவரி 21ஆம் தேதியும், மேகாலயா மற்றும் நாகலாந்துக்கு ஜனவரி 31ம் தேதியும் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. வேட்புமனு தாக்கலை திரும்ப பெற திரிபுராவுக்கு பிப்ரவரி 2ஆம் தேதியும்(இன்று), பிற மாநிலங்களுக்கு பிப்ரவரி 10ஆம் தேதியும் கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.