திரிபுரா தேர்தலில் ஆளும் பஜவின் வியூகம் என்ன.? கூட்டணியுடன் களமிறங்கும் காங்கிரஸ்.!
வரும் பிப்ரவரி 16ஆம் தேதியில் திரிபுரா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அம்மாநில ஆளும் கட்சியான பாஜகவின் நிலைப்பாடு எவ்வாறு இருக்கிறது என்பதை இதில் பார்க்கலாம்.
திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய மூன்று வடகிழக்கு மாநிலங்களுக்கும் வருகிற 16 மற்றும் 27ஆம் தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் திரிபுரா மாநிலத்தில் தேர்தல் வருமாம் பிப்ரவரி 16ஆம் தேதி நடைபெற உள்ளது . அதில் ஆளும் கட்சியாக பாஜக இருக்கிறது.
திரிபுராவில் உள்ள 60 தொகுதிகளில் கடந்த முறை தேர்தலில் பாஜக 36 தொகுதிகளில் வென்று இருந்தது. மேலும், மாநில கட்சியான ஐபிஎப்டியுடன் கூட்டணி அமைத்து எட்டு எம்எல்ஏகளையும் சேர்த்து ஆட்சி அமைத்தது. அப்போது பிப்லப் குமார் தேப் முதல்வராக நியமிக்கப்பட்டார். அவர் முதல்வராக இருந்து கிட்டத்தட்ட 4 அரை ஆண்டுகள் ஆட்சி புரிந்தார்.
அப்போதே பல்வேறு சர்ச்சைகளை பாஜக ஆட்சி பெற்றது. இதன் காரணமாக திடீரேனே தங்கள் முதல்வரை மாற்றி. மாணிக் சாகாவை முதலமைச்சராக்கியது பாஜக தலைமை. இதற்கிடையில் ஆளும் கட்சியில் இருந்த 8 எம்எல்ஏக்கள் மாறி, வெவ்வேறு கட்சிகளுக்கு இடம் மாறினர். இதுவும் ஆளும் பாஜகவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
அதற்கு அப்படியே எதிராக, காங்கிரஸ் கட்சி வலுவான கூட்டணி அமைத்து தேர்தலை களம் காண உள்ளது. பாஜக ஆட்சிக்கு முன்னதாக ஆட்சியில் இருந்த சிபிஎம் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது. அதே போல திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் இந்த தேர்தலை பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டோடு தனியே சந்திக்கிறது. பாஜக ஐபிஎப்டி கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளது.