பெண் காவலரிடம் தகாத முறையில் நடந்ததால் அந்த இளைஞரை உதைத்தேன்.! கிருஷ்ணகிரி எஸ்பி விளக்கம்.!
சம்பந்தப்பட்ட இளைஞர் பெண் காவலரிடம் தகாத முறையில் நடந்துகொண்டார். அந்த இளைஞரை கைது செய்து விசாரித்து கொண்டிருக்கையில் திடீரென தப்பிக்க முயன்றார். அதனால் தான் அந்த இளைஞரை தாக்கும் சூழல் உருவானது. – கிருஷ்ணகிரி காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாகூர் .
கிருஷ்ணகிரி மாவட்டம், கோபசந்திரத்தில் நேற்று எருது விடும் விழாவுக்கு அனுமதி கேட்டு, தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 10கிமீ அதிகமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அதன் பிறகு ஏற்பட்ட அசம்பாவிதத்தால் போராட்டகாரர்களை கலைக்க தண்ணீர் பீச்சியடித்து, கண்ணீர் புகைக்குண்டுகள் வீசியும் கலைத்தனர். போராட்டகாரர்களை கலைக்க சேலம் டிஐஜி மகேஷ்வரி தலைமையில் 300 போலீசார் சம்பவ பகுதியில் குவிக்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 200 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஒரு வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது. அதில் கிருஷ்ணகிரி காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாகூர், போராட்டத்தில் எடுப்பட்டதாக கைது செய்யப்பட்ட ஒரு இளைஞரை லத்தியால் தாக்குவது போலவும், பூட்ஸ் காலால் எட்டி உதைப்பது போலவும் அந்த வீடியோவில் காட்டப்பட்டு இருந்தது.
இந்த விடியோவுக்கு சமூக வலைதழைத்தில் பலரும் தங்கள் விமர்சனங்களை முன் வைத்தனர். இந்த வீடியோ குறித்து, கிருஷ்ணகிரி காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாகூர் கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், சம்பந்தப்பட்ட இளைஞர் பெண் காவலரிடம் தகாத முறையில் நடந்துகொண்டார். அந்த இளைஞரை கைது செய்து விசாரித்து கொண்டிருக்கையில் திடீரென தப்பிக்க முயன்றார். அதனால் தான் அந்த இளைஞரை தாக்கும் சூழல் உருவானது. என விளக்கம் அளித்துள்ளார்.